இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

நவம்பர் 15, 2019 228

ஜகார்த்தா (15 நவ 2019): இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் வடக்கு மலூகு கடல்பகுதியில் வியாழக்கிழமை இரவு 9.47 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 45 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.4-ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக அச்சமடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்தனர். மருத்துவமனைகளில் இருந்த நோயாளிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

எனினும் சேத விவரங்கள் குறித்து தகவல் இல்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...