ஆடம்பர திருமணம் இதுதானாம் - மூளையைப் பிழிந்து நடத்தியிருக்கிறார்கள்!

நவம்பர் 23, 2019 837

இஸ்லாமாபாத் (22 நவ 2019): பாகிஸ்தானில் நடந்த ஒரு திருமணத்தின் புகைப்படம்தான் ஆடம்பர திருமணம் என்று வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானில் தக்காளியின் விலை வரலாறு காணாத அளவில் ஏற்றம் கண்டுள்ளதால் தங்கத்திற்கு பதில் தக்காளியில் மாலை அணிந்து திருமணம் நடைபெற்று இருக்கிறது. இதற்காக மணமக்கள் வீட்டார் ஆலோசித்து மணமகளுக்கு தங்கத்திற்கு பதில் தக்காளியில் ஆபரணம் அணிந்து திருமணம் நடத்தி இதுதான் எங்கள் வீட்டு ஆடம்பர திருமணம் என்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.

இது பாகிஸ்தான் மட்டுமல்லாமல் உலக அளவில் வைரலாகி வருகிறது. மேலும் இது பாகிஸ்தான் பொருளாதாரத்தை கிண்டலடிப்பதாகவும் பலரும் தெரிவித்து வர்கின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...