BREAKING NEWS: லண்டன் பிரிட்ஜில் கத்திக் குத்து - குற்றவாளி சுட்டுக் கொலை!

நவம்பர் 29, 2019 216

லண்டன் (29 நவ 2019): லண்டன் பிரிட்ஜில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

லண்டன் பிரிட்ஜுக்கு அருகில் உள்ள வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் பிற்பகல் 1.58 க்கு கத்திக் குத்துத் தாக்குதலில் ஈடுப்பட்டதாகவும் அவர் பொதுமக்களைக் கத்தியால் குத்தியதாகவும் அதன்பின்னர் அந்த நபர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்..

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட லண்டன் பிரிட்ஜ் பகுதி தற்போது ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் கண்காணிப்பில் உள்ளது.

லண்டன் பிரிட்ஜ் நிலக்கீழ் ரயில்நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் எந்த ரயில்களும் அங்கு நிறுத்தப்படாது என்றும் பிரிட்டிஷ் போக்குவரத்துப் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலானது பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...