உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க 27 நாடுகள் ஒப்புதல்!

Share this News:

பாரிஸ்(26 பிப் 2022): உக்ரைனுக்கு 27 நாடுகள் ஆயுதங்கள் வழங்க ஒப்புதல் அளித்துள்ளன.

ரஷ்யா, உக்ரைன் மீது நடத்திவரும் தாக்குதலால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைன் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டும், தங்கள் நாட்டை விட்டும் வெளியேறி வருகின்றன.

இந்தசூழலில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. கடலிருந்தும், வான்வெளியாகவும் ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தீவிரபடுத்தி வரும் ரஷ்யா, கீவில் உள்ள கீவ் நீர்மின் நிலையத்தையும், மெலிடோபோல் நகரையும் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் 8 உக்ரைன் போர் கப்பல்களையும் அழித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் உக்ரைன் இராணுவம், ரஷ்யாவின் 14விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள், 102 டாங்கிகள், 536 கவச வாகனங்கள், 15 பீரங்கிகளை அழித்துள்ளதாகவும், 3500 ரஷ்ய வீரர்களை கொன்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் ரஷ்யாவின் படையெடுப்பில் இதுவரை 198 உக்ரைன் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது. இதற்கிடையே ரஷ்யாவோ, பொதுமக்கள் இறப்பதை தவிர்க்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக கூறியுள்ளது.

இந்தசூழலில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடனான உரையாடலையடுத்து, தங்கள் கூட்டாளிகளிடமிருந்து ஆயுதங்களும் உபகரணங்களும் வருவதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். அதேபோல் நெதர்லாந்து, உக்ரைனுக்கு 200 விமான எதிர்ப்பு ஏவுகணைகளை அனுப்பவுள்ளது. பிரிட்டனை தலமையிடமாக கொண்ட ஸ்கை நியூஸ் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட 27 நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply