பிரான்ஸ் வான்வழி தாக்குதலில் 50 பேர் பலி!

435

பாரிஸ் (03 நவ 2020): பிரான்ஸ் வான்வழி தாக்குதலில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் அரசுபடைகள் போராடி வரும் புர்கினா பாசோ மற்றும் நைஜரின் எல்லைகளுக்கு அருகிலுள்ள பகுதியில் ஒரு வான்வழி தாக்குதல் வெள்ளிக்கிழமை நடந்தது என்று பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி தெரிவித்தார்.

“அக்டோபர் 30 அன்று மாலியில், பார்கேன் படை 50 க்கும் மேற்பட்ட ஜிஹாதிகளை கொன்றது மற்றும் ஆயுதங்களையும் பொருட்களையும் பறிமுதல் செய்தது” என்று பிரெஞ்சு தலைமையிலான ஜிஹாதி எதிர்ப்பு ஆபரேஷன் பார்கானைக் குறிப்பிட்டு பார்லி கூறினார்.

இராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் ஃபிரடெரிக் பார்பி நான்கு பயங்கரவாதிகள் பிடிபட்டுள்ளனர்” வெடிபொருட்கள் மற்றும் தற்கொலை உடைகள் கண்டுபிடிக்கப்பட்டன இந்த குழு பிராந்தியத்தில் நிலையை தாக்கப்போகிறது என்று கூறினார்

கிரேட்டர் சஹாராவில் ஐ எஸ் அமைப்பை குறிவைத்து மற்றொரு நடவடிக்கை, மொத்தம் 3,000 வீரர்களுடன் நடந்து வருவதாகவும் பார்பி கூறினார்.