அஸ்ட்ராஜெனெகா மூன்றாவது டோஸுக்கு ஓமிக்ரனை எதிர்க்கும் சக்தி அதிகம் : ஆய்வு!

லண்டன் (13 ஜன 2022): அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது பூஸ்டர் டோஸுக்குப் பிறகு கோவிடின் மாறுபாடான ஓமிக்ரானுக்கு எதிராக நல்லமுறையில் செயல்படுவதாக ஆங்கிலோ-ஸ்வீடிஷ் பயோஃபார்மா மேஜர் வெளியிட்ட ஆரம்ப தரவு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு இந்தியாவில் கோவிஷீல்டாக நிர்வகிக்கப்படும் தடுப்பூசியின் தற்போதைய பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்புத் திறன் சோதனையில், மூன்றாவது டோஸாக கொடுக்கப்படும் பூஸ்டர் டோஸ், பீட்டா, டெல்டா, ஆல்பா மற்றும் காமா உள்ளிட்ட கொரோனா வைரசுக்கு உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்தது கண்டறியப்பட்டது.

தற்போதைய சோதனையில் இருந்து மாதிரிகளின் தனி பகுப்பாய்வு ஓமிக்ரானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பூஸ்டர் டோஸின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த கூடுதல் தரவை உலகெங்கிலும் உள்ள சுகாதார அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. .

ஹாட் நியூஸ்:

ஹிஜாப் தடை விவகாரத்தை 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும் : உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி (23 ஜன 2023): ஹிஜாப் தடை தொடர்பான மனுக்களை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விரைவில் விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஹிஜாப் தடையை எதிர்த்து...

நுங்கு, குலோப் ஜாமுன் – சர்ச்சை மருத்துவர் ஷர்மிகா மீது நடவடிக்கை?

சென்னை (25 ஜன 2023): சர்ச்சைக்குரிய மருத்துவக் கருத்துக்கள் தொடர்பாக சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை நடத்தினர். இதன் பின்னர், சித்த மருத்துவ இயக்குனர் கணேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:...

13 வயது மாணவியை கர்ப்பமாக்கிய வளர்ப்புத் தந்தை!

கோவை (27 ஜன 2023): 13 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய, வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். கோவையை சேர்ந்த 13 வயது மாணவி, அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம்...