கொழும்பு: இலங்கையில் முந்தைய அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயகே, மீண்டும் அந்தப் பதவியில் புதிய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக முன்னாள் எம்.பி. அமர்சிங்குக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியுள்ளது.

கொழும்பு: அடுத்தடுத்து வரும் தன் மீதான ஊழல் புகார்களால் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கும் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, தாம் தவறுகள் எதுவும் செய்யவில்லை என்றும், புதிய அரசு தம்மை நிம்மதியாக வாழ விடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ரியாத் : சவூதி, ரியாத்தில் இந்திய சமூகப் பேரவை சார்பில் 66ஆவது குடியரசுநாள் விழா கடந்த 26 ஜனவரி 2015 அன்று கொண்டாடப்பட்டது. விழாவில் தென்னிந்தியாவின் மூன்று மாநில மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

மதச் சகிப்புத் தன்மை குறித்த ஒபாமாவின் பேச்சு, மோடியின் ஆட்சியில் பெருகி வரும் மதச் சகிப்பின்மையைக் குற்றம் சாட்டுவதாக அமைந்ததாக அசாம் முதல்வர் தருண் கோகாய் கூறியுள்ளார்.

திருச்சூர்: மலையாள திரைப்பட நகைச்சுவை நடிகர் மாள அரவிந்தன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் மரணமடைந்தார்.

ஸ்ரீரங்கம்: நடைபெறவுள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களின் வேட்பு மனுத்தாக்கல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

திருவனந்தபுரம்: கேரள நிதித்துறை அமைச்சர் கே.எம்.மாணி பதவி விலகக் கோரி பாரதீய ஜனதா கட்சி சார்பில் கேரளா முழுவதும் நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...