பில்கேட்ஸ் மகள் முஸ்லிம் இளைஞரை மணக்கிறார்!

1165

நியூயார்க் (31 ஜன 2020): பில்கேட்ஸின் மகள் ஜெனிஃபர் கேத்தரின் முஸ்லிம் இளைஞரை மணப்பதாகவும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர் பில் கேட்ஸின் மகள் ஜெனிபர் கேட்ஸ் காதலனும் முஸ்லிம் இளைஞருமான நேயல் நஸ்ஸருடன் தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ளார். ஜெனிஃபர் கேட்ஸ் தனது நிச்சயதார்த்தை வியாழக்கிழமை இன்ஸ்டாகிராமில் தெரிவித்து நேயல் நாஸருடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  பள்ளியில் குண்டுவெடிப்பு - மாணவர்கள் பலி!

பில்கேட்ஸ் தனது மகள் ஜெனிஃபர் அவரது நிச்சயதார்த்தம் பற்றி அறிவித்தற்கு, “என் உடல் முழுவதும் சிலிர்த்துவிட்டது. வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். அதே போல, அவருடைய தாயார் மெலிண்டாவும், “நான் உன்னையும் நேயல் நஸ்ஸரையும் நினைத்து சிலிர்த்துப்போய்விட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பில்கேட்ஸுக்கு ஜெனிஃபர் கேத்தரின், போபே அடிலெ என இரண்டு மகள்களும் உள்ளமை குறிப்பிடத்தகக்து.