கனடாவில் முதல் முறையாக பொதுவெளியில் ஒலித்த பாங்கோசை!

Share this News:

டொரான்டோ (30 ஏப் 2020): கனடா நாட்டில் முதல் முறையாக ரம்ஜான் மாதத்தில் பொது வெளியில் ஒலிப்பெருக்கியில் பாங்கின் ஓசை ஒலிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களை ஐந்து வேளை தொழுகைக்கு அழைக்கும் பாங்கு பொதுவில் ஒலிப்பது கிடையாது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் மேற்கத்திய நாடுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக கனடாவிலும் ஐந்து வேளை தொழுகைக்கு பொதுவெளியில் ஒலிப்பெருக்கியில் பாங்கு அழைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டொரான்டோ ஜும்மா மசூதி உறுப்பினர் இர்ஷாத் கூறுகையில், “கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதாலும், ரம்ஜான் மாதம் என்பதாலும், ஒருமாத காலத்திற்கு மட்டுமே அனுமதி கிடைத்துள்ளது. எனினும் தற்போது வீட்டை விட்டு யாரும் வெளியே வரமுடியாத சூழல் இருப்பதால் வீட்டிலேயே தொழுது கொள்ள இந்த பாங்கு அழைப்பு உதவியாக இருக்கும். இது தற்காலிகமானதுதான்” என்றார்.

மேலும் இமாம் ஷீரஜ் முஹம்மது இதுகுறித்து கூறுகையில்,” இனி வரும் காலங்களில் நிரந்தரமாக எல்லா நாட்களிலும் பொதுவில் பாங்கு அழைப்பு கொடுக்க முயற்சி மேற்கொள்வோம், அதேவேளை தற்போது பொதுமக்களின் வரவேற்பு எப்படி உள்ளது? என்பதை பொறுத்தே அடுத்த கட்ட முயற்சி மேற்கொள்ளப்படும்.” என்றார்.

இதேபோன்று அமெரிக்காவிலும் பொதுவில் பாங்குக்கு அழைப்பு விடுக்க அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this News: