அமெரிக்காவிற்குள் நுழைந்த ஆபத்து!

நியூயார்க் (22 ஜன 2020): மனிதர்கள் மூலம் பரவும் ஆட்கொல்லி வைரஸ் காரணமாக சீனாவில் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்த சூழலில், அந்த வைரஸ் பாதிப்பு அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் ஒன்று தற்போது சீனாவில் பரவ ஆரம்பித்துள்ளது. சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ள இந்த கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் மத்தியில் கடும் அச்சம் எழுந்துள்ளது.

இந்த வைரஸ் காரணமாக இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சீனாவில் பணியாற்றும் இந்திய பெண் ஒருவருக்கு இந்த நோய் தோற்று கண்டறியப்பட்ட நிலையில், தென் கொரியாவில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வாஷிங்டன் நகரில் வசிக்கும் 30 வயதுடைய அந்த நபர் சமீபத்தில் பணி நிமித்தமாக சீனா சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்ட அந்த நபரை தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் சார்ஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது. வைரஸ் நோயான இதற்கு 650 பேர் வரை பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்:

அதிர்ந்தது துபாய் – நடந்தது என்ன?

துபாய் (23 ஜன 2023): துபாய் மீடியா சிட்டி மக்கள் இன்று (திங்கள் கிழமை) பிற்பகல் பல அதிர்வுகளை உணர்ந்தனர். என்ன நடக்கிறது? என்பது தெரியாமல் பலரும் சமூக வலைதளங்களில், "நில அதிர்வு எதுவும்...

நுங்கு, குலோப் ஜாமுன் – சர்ச்சை மருத்துவர் ஷர்மிகா மீது நடவடிக்கை?

சென்னை (25 ஜன 2023): சர்ச்சைக்குரிய மருத்துவக் கருத்துக்கள் தொடர்பாக சித்த மருத்துவர் ஷர்மிகாவிடம் விசாரணை நடத்தினர். இதன் பின்னர், சித்த மருத்துவ இயக்குனர் கணேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:...

காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை திடீர் நிறுத்தம்!

ஜம்மு (27 ஜன 2023): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை தொடங்கிய யாத்திரை பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் இருந்து ஜோடோ யாத்திரை நேற்று...