புது டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றும் "மன் கி பாத் (மனதின் குரல்)" என்ற நிகழ்ச்சி வானொலியில் மாதம் தோறும் ஒலிபரப்பாகி வருகிறது. இம்மாத உரை வரும் 29-ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒலிபரப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் : குஜராத் மாநிலத்தில் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக அகமதாபாத், சூரத், ராஜ்கோட், வடோதரா, ஜாம்நகர், பவ்நகர் ஆகிய 6 மாநகராட்சிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பின் மோடி இல்லாத தேர்தல் குஜராத்தில் நடைப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை (23 நவம்பர் 2015) : தமிழக மக்களின் வெள்ள நிவாரண நிதியை தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து கேட்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் "தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும் பல தலைவர்களும் இதை தான் கூறியிருப்பதாகவும், இருந்தும் அரசு அமைதியாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். நிவாரண நிதியை தேர்தல் நேரத்தில் தான் அரசு கொடுக்க முடிவெடுத்திருக்கும்" என சந்தேகப்படுவதாகவும் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி (22 நவம்பர் 2015): கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட, சுசீந்திரம் அருகே உசரவிளை பகுதியைச் சார்ந்த அ.தி.மு.க தொண்டருக்கு கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.தளவாய்சுந்தரம் நிதியுதவியாக ரூ.5 ஆயிரம் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர்கள்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழையால் சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஆப்ரிக்க நாடான மாலியில் ஹோட்டல் ஒன்று பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த நிலையில் அங்கு பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடந்த சண்டையில் 27 பேர் கொல்லப் பட்டனர்.

சென்னையில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28-ந் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கி, நேற்றுடன் 18 நாட்கள் ஆகின்றன.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு குறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...