தமிழகத்தில் மழையின் காரணமாக இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

கோவில்பட்டியில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மழையால் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

சென்னை(10-11-15): சென்னையில் பெய்து வரும் கன மழையின் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பகல் 1.30 மணியளவில் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

கன்னியாகுமரி (09-11-15): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் மழையின் காரணமாக அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட உள்ளன.

சென்னை : "மக்கள் நல கூட்டியக்கம் தேர்தல் கூட்டணியாக செயல்படும்" என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார். மேலும் "அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க தவிர ஒத்தக்கருத்துக் கொண்ட கட்சிகள் இந்தக் கூட்டணியில் சேரலாம்" என வை.கோ அழைப்பும் விடுத்துள்ளார்.

புதுடெல்லி : தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நீக்க வேண்டும்" என்று பா.சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்ட மூத்தத் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். "கட்சி தலைமைக்கு எதிரான செயல்களில் இளங்கோவன் தொடர்ந்து ஈடுபடுகிறார்" என்று சோனியா காந்தியிடம் பரபரப்பு குற்றச்சாட்டையும் அளித்துள்ளனர்.

திருவள்ளூர் : வருகின்ற 2016-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், "அ.தி.மு.க, தி.மு.க-வை விட பா.ம.க அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்" என்றும், "அக்கட்சிகளை மக்கள் ஏற்கனவே புறக்கணிக்கத் தொடங்கிவிட்டனர்" என்றும் பா.ம.க நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை : இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற உத்தரவிற்கு தடைவிதிக்கக்கோரி முத்துகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...