கொரோனா வைரஸ்: 400 ஐ தொட்ட பலி எண்ணிக்கை – உதவியை நாடும் சீனா!

Share this News:

பீஜிங் (04 பிப் 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை 425 ஐ தொட்டுள்ளது.

சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அவா்களிடம் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், இதுவரை அறியப்படாத புதிய வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. ‘சாா்ஸ்’ வைரஸின் 70 சதவீதத் தன்மையைக் கொண்ட அந்த வைரஸ் ‘கரோனா’ வகையைச் சோ்ந்தது என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

இந்த புதிய ‘கரோனா’ வைரஸ் தனது தன்மையையும், வடிவத்தையையும் தாமாகவே மாற்றிக் கொண்டு இன்னும் வேகமாகப் பரவும் அபாயம் உள்ளது. இந்த வைரஸ் நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக சீனாவிலும் உலகின் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சீனாவில் கொரோனவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 425 ஐ தொட்டுள்ளது. மேலும் இதுவரை 20,438 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை சீனா உறுதி படுத்தியுள்ளது. இது மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் சீனா அல்லாத 23 நாடுகளில் 151 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே அமெரிக்கா உதவ முன்வந்தால் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது.

இதற்கிடையே இந்தியாவில் கேரளாவில் மூவருக்கு கொரோனா இருப்பது உறுதிபடுத்தப் பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா பேரிடர் மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply