கொரோனா :அமெரிக்கா, ஐரோப்பாவை தொடர்ந்து அடுத்த டார்கெட் ரஷ்யா!

Share this News:

மாஸ்கோ (07 மே 2020): ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,599 பேருக்கு கொரோனா இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸை தடுக்க உல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ரஷ்யாவிலும் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இதனால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் 10 வது இடத்தில் இருந்து 8 வது இடத்திற்கு சென்றது. இந்நிலையில்மாஸ்கோவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 10,599 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,65,929 ஆக உள்ளது. ரஷ்யாவின் கடந்த 4 நாட்களாக ஒவ்வொரு நாளின் சராசரி பாதிப்பு 10 ஆயிரத்தை கடந்து வருகிறது.

கொரோனாவுக்கு ஒரேநாளில் 86 பேர் பலியாகினர். மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 1,537 ஆக அதிகரித்துள்ளது.


Share this News: