கொரோனாவுக்கு ஒரே நாளில் 2000 பேர் உயிரிழப்பு!

பெய்ஜிங் (25 மார்ச் 2020): உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு ஒரே நாளில் 2000 பேர் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் பல உலக நாடுகளிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அந்த பதற்றம் இந்திய மக்களையும் தொற்றிக் கொண்டுள்ளது. இதனால் அடுத்த 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு செயல்படுத்தப்படுவதாக நேற்றிரவு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த 21 நாட்களில் மளிகை, காய்கறி, பால், இரைச்சி போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. இதில் வெளிநாடு போய்வராத மதுரை நபரும் அடக்கம். ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். தமிழகம் முழுவதும் வீடுகளில் 15 ஆயிரத்து 298 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 116 பேர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் 743ல், 608 பேருக்கு பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளது. 120 மாதிரிகளின் முடிவுகள் வரவிருக்கின்றன.

இந்நிலையில் இந்நிலையில் தற்போது உலகளவில் கொரானாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,810 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக 16000-மாக இருந்த இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இத்தாலி, அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஸ்பெயின் ஈரான் உள்ளிட்ட நாடுகளில் அதிக உயிர்களை பலிவாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹாட் நியூஸ்: