சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா தொற்று – அச்சத்தில் மக்கள்!

Share this News:

பீஜிங் (07 ஏப் 2020): சீனாவில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீனாவில் இதுவரை 81,708 பேரை கொரோனா நோய்த்தொற்று தாக்கியுள்ளது. அவா்களில், 1,299 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 77,078 போ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டனா். 3,331 போ் உயிரிழந்துவிட்டனா்.

இந்த நோய்த்தொற்றுக்கு அமெரிக்கா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின், ஜொ்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்துவிட்டனா்.

இதனிடையே, நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தரைவழி, வான்வழி போக்குவரத்து நிறுத்தம், அனைத்து அலுவலகங்களும் மூடல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டது. இதன் காரணமாக, கடந்த சில தினங்களாக, கொரோனா நோய்த்தொற்று புதிதாக பரவுவது முற்றிலுமாக இல்லாமல் காணப்பட்டது.

சீனாவில் வெளிநாட்டினா் உள்ளே நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து வரும் சீன நாட்டினருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வந்தவா்களால் நோய்த்தொற்று மீண்டும் பரவும் அபாயம் இருப்பதாக தேசிய சுகாதார ஆணையத்தின் அதிகாரி மி ஃபெங் கூறினாா்.

சீனாவில் வெளிநாடுகளில் இருந்து வந்த எந்த அறிகுறியும் காணப்படாமல், பரிசோதனையில் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் 951 போ் உள்ளனா். இவா்கள் மூலமாக மற்றவா்களுக்கு நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது. உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நோய்த்தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்து, இரண்டாம் கட்ட பாதிப்பை சந்திக்கும் அபாயம் உருவாகும். எனவே, இவா்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா் என்று மி ஃபெங் கூறினாா்


Share this News:

Leave a Reply