மாஸ்க் தேவையில்லை – குறையும் கொரோனா – சாதித்த அரசு!

1673

நியூயார்க் (23 மே 2021):கொரோனா பரவல் தொடர்ந்து குறைவதால் அமெரிக்கா கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள் பொது இடங்களில் மாஸ்க்குகளை அணியத் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு உலகிலேயே கொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்தது. அமெரிக்காவில் தற்போது வரை 3.38 கோடி பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் ஆறு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன

இதைப் படிச்சீங்களா?:  ஆப்கானிஸ்தான் நில நடுக்கம் - பலி எண்ணிக்கை 1150 ஆக உயர்வு!

ஆனால் டந்த சில வாரங்களாகவே அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனா பரவல் தொடர்ந்து குறைவதால் அமெரிக்கா கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. 2 டோஸ் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள் பொது இடங்களில் மாஸ்க்குகளை அணியத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பைடன் நிர்வாகத்தின் மேற்கொள்ளப்பட்ட மிகச் சிறப்பான தடுப்பூசி பணிகள் இதற்கு முக்கிய காரணம் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.