94.5 சதவீதம் திறன் கொண்ட கொரோனா தடுப்பூசிகண்டுபிடிப்பு!

Share this News:

நியூயார்க் (16 நவ 2020): அமெரிக்காவின் மார்டனா மருந்து நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது என தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் 11 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த நிறுவனங்களில் அமெரிக்காவின் மார்டனா இங்க் மருந்து நிறுவனமும் ஒன்று. அந்நிறுவனம் கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி இருந்தது. இந்த தடுப்பூசியின் இறுதிகட்ட பரிசோதனைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மார்டனா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 94.5 சதவீதம் திறன் கொண்டது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

30 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் தடுப்பூசி 94.5 சதவீதம் கொரோனா வைரசை கடுப்படுத்துவது உறுதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களிடமும் இந்த மார்டனா தடுப்பூசி நல்ல செயல்திறனை கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மற்றொரு அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி 90 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மனிதர்களை பாதுகாக்கிறது என ஆய்வு முடிவில் தெரியவந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply