கப்பல் தீ விபத்தால் இலங்கைக்கு ஆபத்து!

Share this News:

கொழும்பு (04 செப் 2020): சரக்கு கப்பலில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் இலங்கைக்க்கு பேராபத்து காத்திருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குவைத்தின் மினா அல் அஹ்மாதி துறைமுகத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி புறப்பட்ட சரக்கு கப்பல், இந்தியாவின் பாரதீப் துறைமுகத்தை செப்டம்பர் 5 ஆம் தேதி அடையும் இலக்குடன் பயணம் மேற்கொண்டிருந்தது.

இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் கப்பல் வந்து கொண்டிருந்தபோது அதில் தீ பற்றி எரியத் தொடங்கியது. கப்பலின் எஞ்சின் பகுதியில் பற்றி எரியத் தொடங்கிய தீ, படிப்படியாக கப்பலின் பிற பகுதிகளுக்கும் பரவ தொடங்கியது. இந்த பயங்கர தீயை அணைக்கும் பணியை இந்தியா -இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் எரிபொருளுடன் கப்பல் தீப்பற்றி எரிவதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதி கடற்பரப்பில் மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply