முகம் மூடுபவர்களுக்கு அதிக கொரோனா பாதிப்பு-ஆய்வு முடிவு!

606

நியூயார்க்(17/01/2021): முகம் மூடாதவர்களைவிட முகத்தை மூடுபவர்களுக்குத் தான் கொரோனா பாதிப்பு அதிகம் என ஆய்வு முடிவொன்று வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் வெர்மோன்ட் மாகாணத்திலுள்ள வெர்மோன்ட் மருத்துவப் பல்கலை கழகம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடையேயும் பாதிக்கப்படாதவர்களிடையேயும் ஆய்வொன்றை நடத்தியது. அதில், முகத்தை மூடாமல் இருப்பவர்களைவிட முகத்தை மூடியிருப்பவர்களிடையே கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கு, முகத்தை மூடியிருப்பவர்களிடையே தாம் பாதுகாப்பாக இருப்பதான உணர்வு எழுவதால் எவ்விதத் தயக்கமும் இன்றி மற்றவர்களிடையே கலந்து உறவாடுவதுதான் காரணம். ஆனால் அதே சமயம், முகத்தை மூடாமல் நடமாடுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கின்றனர். இதனாலேயே, முகத்தை மூடுபவர்களிடையே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது எனத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஆய்வு நடத்திய மருத்துவர்களில் ஒருவர் கூறும்போது,

முகத்தை மூடுதல் அவசியமானது; ஆனால், கட்டாயமானதல்ல. முகத்தை மூடினாலும் இல்லையேலும் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதுதான் கட்டாயமானது. இதனை முகத்தை மூடுபவர்களைவிட முகத்தை மூடாதவர்கள் சரியாக கடைபிடிக்கின்றனர். முகத்தை மூடிவிடுவதால் மட்டும் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிவிடலாம் என்ற மக்களின் மனோநிலை மாற வேண்டும். இது தொடர்பான தொடர் அறிவுறுத்தல்கள் மூலம் ஆரோக்கிய நிலையங்கள் மக்களைப் பயிற்றுவிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.