கொரோனா குறித்த 70 லட்சம் போலி பதிவுகள் நீக்கம் – ஃபேஸ்புக் அதிரடி நடவடிக்கை!

615

நியூயார்க் (14 ஆக 2020): கொரோனா குறித்த 70 லட்சம் போலி பதிவுகளை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,

ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பதிவுகளை மிகவும் கண்காணித்து வருகிறது. அதனடிப்படையில், போலி பதிவுகள், வெறுப்பூட்டும் பதிவுகள் ஃபேஸ்புக் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் பட்சத்தில் அவை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவிட் 19 குறித்த தவறான பதிவுகள் மற்றும் போலியான மருத்துவ ஆலோசனைகள் உள்ளிட்டவைகள் என 70 லட்சம் பதிவுகளை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கோவிட் 19 பரவல் காரணமாக குறைந்த ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் பணிபுரிய அனுமதி என்பதால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஃபேஸ்புக் நிறுவனம் பதிவுகளின் உள்ளடகத்தை மறு ஆய்வு செய்ய தானியக்கத்தையே அதிகம் நம்பியிருப்பதாக ஃபேஸ்புக் நிறுவன உப தலைவர் கய் ரோசன் தெரிவித்துள்ளார்.