துபாய் மக்களுக்கு எச்சரிக்கை!

616

துபாய் (14 ஜன 2020): துபாயில் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

“ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில், செவ்வாய்க்கிழமை பகல் 11 மணிக்கு தொடங்கும் மழை புதன் கிழமை வரை நீடிக்கும்” என்று துபாய் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமை பலத்த மழை பெயத நிலையில் மேலும் மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.