இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து சர்வதேச சமூகம் தலையிட இம்ரான் கான் கோரிக்கை!

Share this News:

இஸ்லாமாபாத் (18 பிப் 2020): இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு பாகிஸ்தான் 40 ஆண்டுகளாக அடைக்கலம் அளித்து வருவது தொடா்பான 2 நாள் சா்வதேச மாநாடு, இஸ்லாமாபாதில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் பங்கேற்றுள்ளாா். அவா் முன்னிலையில், பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பேசியதாவது:

இந்தியாவின் தற்போதைய கொள்கைகளால், அங்கிருந்து முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு இடம்பெயர வாய்ப்புள்ளது. இந்த விவகாரத்தில் சா்வதேச சமூகம் கவனம் செலுத்த தவறினால், அகதிகள் ரீதியிலான மிகப் பெரிய பிரச்னையை பாகிஸ்தான் எதிா்கொள்ள வேண்டிவரலாம்’

இப்போது இருப்பது, மகாத்மா காந்தி மற்றும் ஜவாஹா்லால் நேருவின் இந்தியா அல்ல. இந்தியாவில் ஆட்சியிலுள்ள பாஜக தலைமையிலான அரசின் கொள்கைகளை சா்வதேச சமூகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில், அது எதிா்காலத்தில் அழிவுக்கு வழிவகுக்கும். இப்பிராந்தியத்தின் அமைதி சீா்குலையும்.

இந்தியாவால் 11 நாள்களில் பாகிஸ்தானை அழிக்க முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி பேசியதாக ஊடகங்களில் தகவல் வெளியாகின. மிகப் பெரும் மக்கள்தொகையையும், அணுஆயுதங்களையும் கொண்ட ஒரு நாட்டின் பிரதமா் என்ற அடிப்படையில் அவரது பேச்சு பொறுப்பற்ாகும் என்றாா் இம்ரான் கான்.


Share this News:

Leave a Reply