நடுக்கடலில் சிக்கிய எவர் கிரீன் கப்பல் மீட்பு!

1032

கெய்ரோ (29 மார்ச் 2021): எகிப்து சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிரீன் கப்பல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் இருந்து 18,300 கண்டெய்னர்களுடன் எவர் கிரீன் என்ற கப்பல் கடந்த 22 ம் தேதி சூயஸ் கால்வாய் வழியாக நெதர்லாந்து சென்று கொண்டிருந்தது. அச்சமயத்தில் கால்வாய் பகுதியில் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக கப்பல் கால்வாயின் குறுக்காக சிக்கிக்கொண்டது. உலக கப்பல் போக்குவரத்தில் 15% இந்த சூயஸ் கால்வாய் வழியாக தான் நடக்கிறது. தற்போது சீன சரக்கு கப்பல் சிக்கிக்கொண்டிருப்பதால் 321 கப்பல்கள் அவ்வழியே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கப்பலை இயக்கிய மாலுமிகள் அனைவரும் இந்தியர்கள் ஆவர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது எவர் கிரீன் கப்பல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.