அமெரிக்க ஈரான் பதற்றம் – அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் ராக்கெட் தாக்குதல்!

Share this News:

பாக்தாத் (13 ஜன 2020): ஈராக் விமானப்படை தளம் மீது, அமெரிக்க ராணுவத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை அமெரிக்கா தாக்குதல் நடத்தி கொன்றபின், இரு நாடுகளுக்கிடையே போர் அபாயம் ஏற்பட்டுள்ளது. ‘இதற்கு பழிக்கு பழி வாங்குவோம்’ என ஈரானும் கூறியது.

இந்நிலையில் ஈராக்கின் பாக்தாக் அமெரிக்க வீரர்களை குறி வைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அமெரிக்க ராணுவத்தை குறி வைத்து, 4 ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏ.எப்.பி., நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் 7 வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


Share this News:

Leave a Reply