ஆர்.எஸ்.எஸ். பிஜேபியைச் சேர்ந்த இந்தியருக்கு அமெரிக்கா ஜனாதிபதி வேட்பாளர் கல்தா!

Share this News:

வாஷிங்டன் (12 மார்ச் 2020): அமெரிக்கா. ஜனாதிபதி தேர்தில் போட்டியிடும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் (Joe Biden) தமக்குத் தொடர்பாளராக நியமித்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமித் ஜானி என்பவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.

அமித் ஜானி அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியில் பல காலமாக செயல்பட்டு வருகிறார். அக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன் அமித் ஜானியை முஸ்லிம் சமூகத் தொடர்பாளராகவும் தேர்தல் பிரச்சாரத்தின் டைரக்டராகவும் நியமித்திருந்தார். ஜோ பிடனின் ஆதரவாளர்கள் மத்தியில் அது பெரும் அதிருப்தியையும் வெறுப்பையும் உருவாக்கியது.

பிஜேபி கட்சியுடனும் நரேந்திர மோதியுடனும் அமித் ஜானி நெருங்கிய தொடர்புடையவர். தொடர்ந்து ஆதரித்தும் வருகிறார். அவருடைய தந்தை சுரேஷ் ஜானியும் மோதியும் பதின்மப் பருவத்தில் குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ். ஷாகாவில் ஒன்றாகச் சேர்ந்திருந்தவர்கள். அமெரிக்காவில் உள்ள பிஜேபியின் அயல்நாட்டு நண்பர்கள் என்ற அமைப்பை உருவாக்கியவர்களுள் சுரேஷ் ஜானியும் ஒருவர்.

இவ்விதம் அமித் ஜானியும் அவருடைய குடும்பமும் இனவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிஜேபியுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாக உள்ள நிலையிலும், தற்சமயம் இந்தியாவில் அவை இரண்டும் இனவெறிச் செயல்களில் ஈடுபட்டுள்ள நிலையிலும் இஸ்லாமோஃபோபியா எண்ணம் கொண்ட அமித் ஜானியை முஸ்லிம் தொடர்பாளராகவும் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார டைரக்டராகவும் நியமித்ததை எதிர்த்து ஜோ பிடனின் ஆதரவாளர்களும் பொது மக்களும் கண்டனங்களையும் புகார்களையும் பெருவாரியான அளவில் கடுமையாகத் தெரிவிக்க ஆரம்பித்தனர்.

“நரேந்திர மோதியின் ஆதரவாளரும் நண்பருமான ஒருவரை நியமிப்பது முஸ்லிம் விரோத, இந்துத்துவ அரசியலுக்கு கதவுகளைத் திறந்து விடுவதாகும். ஃபாஸிஸ்டுகளுடன் உறவாடும் அத்தகைய வேட்பாளரை நாம் ஆதரிக்க முடியாது” என்று ஈக்குவாலிட்டு லேப்ஸ் (Equality Labs) திறந்த மடல் ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

அனைத்தையும் கருத்தில்கொண்டு அமித் ஜானியை பொறுப்பிலிருந்து நீக்கிய ஜோ பிடன் அந்தப் பொறுப்பில் பில் கிளிண்டனின் முன்னாள் உதவியாளரான ஃபாருக் மிதா என்பவரை நியமித்துள்ளார்.


Share this News:

Leave a Reply