இங்கிலாந்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா- மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு!

Share this News:

லண்டன் (14 அக் 2020): இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் மூன்றடுக்கு ஊரடங்கிற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார்.

இங்கிலாந்தின் வடக்கில் கொரோனா தொற்று பரவல் மிகவேகமாக பரவி வருகின்றது. வரவிருக்கும் வாரங்களில் இறப்புக்கள் அதிகரிக்கும் என்றும், கடந்த மாத தொடக்கத்திலிருந்து தொற்று பரவல் வேகம் அதிகரித்து வருகின்றது என்றும், துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய புள்ளிவிவரங்கள் இளையவர்களிடையே வைரஸ் விரைவாக பரவி வருவதாகக் காட்டுகின்றன, ஆனால் நோய்த்தொற்றுகள் வட மேற்கு மற்றும் வடகிழக்கில் வயதானவர்களுக்கு பரவுகின்றன.

இதனை கட்டுப்படுத்த ஏற்கெனவே இருந்த ஆறு நபர்கள் மேல் கூடக்கூடாது என்கிற விதியும், கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என்கிற விதையையும் மக்கள் மேலும் அதீத கவனத்துடன் பின்பற்ற ஜான்சன் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி நடுத்தர அளவில் தொற்று பாதிப்புகளை கொண்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கீழ்க்கண்ட விதிமுறைகள் அமல்படுத்தப்படும்.

மதுபான விடுதிகளும், உணவகங்களும் கட்டாயமாக இரவு 10 மணிக்கு பின்னர் தொடரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு நிலையங்களை பொறுத்த அளவில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பல்கலைக்கழகங்களை பொறுத்தமட்டில் ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எவ்வித தளர்வுகளுமின்றி கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

பயணத்திற்கும், போக்குவரத்திற்கும் பாரிய அளவிலான கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. வேலைகளை பொறுத்த அளவில், உங்களால் முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்பதே ஆலோசனை என ஜான்சன் கூறியுள்ளார்.

அதேபோல் திருமண நிகழ்ச்சிகளில் 15 பேரும், இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் 15 நபர்களும், இறுதிச் சடங்கு நடக்கும் இடத்தில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே கூடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற கடைகள்
உட்பட அனைத்து கடைகளும் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுகளை பொறுத்த அளவில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ஆறு விதிமுறைகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட உட்புற விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் முழு இங்கிலாந்துக்கும் ஆறு மாதக் காலத்திற்கு பொருந்தும். 28 நாட்களுக்கு ஒரு முறை விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யப்படும்.

அதிக அளவு தொற்று பாதிப்புகளை கொண்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கீழ்க்கண்ட விதிமுறைகள் அமல்படுத்தப்படும்.இந்த பகுதியில் வீட்டிற்குள் விருந்தினர்களை தங்க வைக்கவோ, அல்லது நண்பர்களின் வீட்டிற்கு செல்லவோ தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசியமற்ற கடைகள் உட்பட அனைத்து கடைகளும் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.அதேபோல உடற்பயிற்சி கூடங்கள், சிகை அலங்கார நிலையங்களை பொறுத்த அளவில், தொடர்ந்து இயங்க வேண்டுமா அல்லது, மூடப்பட வேண்டுமா என்பது குறித்து உள்ளூர் நிர்வாகங்கள் முடிவுகளை மேற்கொள்ள வழிகாட்டப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply