குவைத் சாலை விபத்தில் இந்தியர்கள் உட்பட 15 பேர் பலி!

ஏப்ரல் 01, 2018 1116

பர்கான் (01 ஏப் 2018): குவைத்தில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் இந்தியர்கள் உட்பட 15 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

குவைத்தில் ஒரு நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் பணி முடிந்து இருப்பிடத்துக்கு இரண்டு வேன்களில் திரும்பிக் கொண்டு இருந்தபோது, பர்கான் பீல்டு என்ற இடத்தில் எதிரே வந்த பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் 15 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப் படுகிறது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடி மீட்பு பணியில் இறங்கியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...