சவூதியில் விஷ எறும்பு கடித்து இந்திய பெண் மரணம்!

ஏப்ரல் 05, 2018 808

ரியாத் (05 ஏப் 2018): சவூதி அரேபியா ரியாத்தில் விஷ எறும்பு கடித்ததில் கேரளாவை சேர்ந்த பெண் பரிதாபமாக பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அடூர் பகுதியை சேர்ந்தவர் சூசி ஜெஃப்பி (36). இவர் தனது குடும்பத்தாருடன் சவுதி அரேபியா நாட்டின் தலைநகர் ரியாத் நகரில் வசித்து வந்தார்.

கடந்த மாதம் 19ம் தேதி, வீட்டில் இருந்த சூசியை மிகவும் கொடிய விஷத்தன்மை வாய்ந்த ஒரு வகை எறும்பு கடித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் உடல் முழுவதும் விஷம் பரவி, சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...