ஷார்ஜாவில் மனைவியை கொன்றுவிட்டு கணவர் இந்தியாவுக்கு தப்பியோட்டம்!

ஏப்ரல் 26, 2018 1078

ஷார்ஜா (26 ஏப் 2018): ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் இந்தியாவுக்கு தப்பியோடியுள்ளார்.

ஷார்ஜா மைசலூன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 36 வயது மதிக்கத் தக்க கேரளாவை சேர்ந்த பெண் இறந்து வீட்டிலேயே புதைக்கப் பட்டிருந்தார். முன்னதாக தங்கையை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் வீடு பூட்டி இருப்பதாகவும், அந்த பெண்ணின் சகோதரர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணை மேற்கொண்டு வீட்டை உடைத்து பார்த்ததில் பெண் கொல்லப் பட்டு புதைக்கப் பட்டது மோப்ப நாய் மூலம் தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஷார்ஜா காவல்துறை அழுகிய நிலையில் இருந்த உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண்ணின் கணவரை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் இந்தியாவுக்கு தப்பியோடியது தெரிய வந்தது. மேலும் அவருக்கு இந்தியாவில் ஒரு மனைவி இருப்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில் கணவர்தான் பெண்ணை கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கக் கூடும் என சந்தேகித்துள்ள ஷார்ஜா போலீஸ் இண்டெர்போல் போலீஸ் மூலம் தப்பியோடிய கணவரை கைது செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...