சவூதியில் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு?

ஏப்ரல் 29, 2018 951

ஜித்தா (29 ஏப் 2018): சவூதி அரேபியாவில் கலக்கப் போவது யாரு புகழ் கலைஞர்கள் பங்கேற்ற தமிழ் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

சவூதியின் ரியாத், தம்மாம் மற்றும் ஜித்தா ஆகிய நகரங்களில் நடைபெற்ற தமிழ் பொழுது போக்கு கலை நிகழ்ச்சி கடந்த வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் நடைபெற்றது.

இதில் பிரபல தமிழ் நடிகர் ராதாரவி, விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின், கலக்கப் போவது யாரு, தினேஷ், திவாகர், விக்னேஷ் சிவா, தவ்பீக் மற்றும், ரேடியோ ஜாக்கி ஃபைசல் ஆகியோர் பங்கேற்ற நகைச்சுவை கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பாடல் ஆடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இதில் தமிழ் மக்கள் மட்டுமல்லாது பெரும்பாலான மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...