சவூதி விபத்தில் உம்ரா யாத்ரீகர்கள் பலி!

மே 20, 2018 1047

மக்கா (20 மே 2018): சவூதி அரேபியா சாலை விபத்து ஒன்றில் உம்ரா யாத்ரீகர்கள் 9 பேர் பலியாகியுள்ளனர்.

மக்காவிலிருந்து மதீனா செல்லும் அல் ஹிஜ்ரா சாலையில் உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளானது. ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட இந்த விபத்தில் 9 பேர் பலியானதாகவும் 18 பேர் படுகாயம் அடைந்ததாகவும் சவூதி ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது. இதில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

பலியானவர்கள் பெரும்பாலானவர்கள் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...