ஜித்தா TNTJ இஃப்தார் நிகழ்ச்சி!

ஜூன் 06, 2018 674

ஜித்தா (06 ஜூன் 2018): ஜித்தாவில் (01-06-2018) வெள்ளிக்கிழமையன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலத்தின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஹம்தானியா பகுதியில் மாலை 5.30 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சியின் ஆரம்பமாக சகோ.நெய்னா முஹம்மது தலைமையில் இஸ்லாமிய வினாடி-வினா நடைபெற்றது. அதில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அடுத்ததாக அனைவருக்கும் இஃப்தார் உணவு பரிமாறப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியுடன் நோன்பு திறந்தபின் தொழுகைகளில் கலந்து கொண்டு இறைவனுக்கு நன்றி செலுத்தினர்.

பின்னர் சகோ. அப்துல் வாஜித் ‘நோன்பின் மாண்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். ஒருபுறம் சிறுவர், சிறுமியர் விளையாடிக் களிக்க, மற்றொரு புறம் பெண்களுக்கான தனிக்கூடாரத்தில் அவர்கள் நோன்பை திறந்து தொழுகை நடத்தினர்.

இறுதியாக மௌலவி.பஷீர் அவர்களின் உரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. மண்டல செயலாளர் ஸலாஹ_தீன் தலைமையில் நிர்வாகிகளும் தொண்டர்களும் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

ஜித்தா மண்டல தலைவர் முஹமது முனாஃப் இது பற்றி கூறும் போது, ‘சிறப்பு மிக்க ரமலான் மாதத்தில் அதிகாலை முதல் மாலை வரை தண்ணீர், உணவு எதுவும் அருந்தாமல் இறைவனுக்காக நோன்பிருக்கும் நோன்பாளிகளுக்காக ஜித்தா மண்டலத்தின் பல கிளைகளில் ஆண்டு தோறும் இஃப்தார் நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று மண்டலம் சார்பாக நடைபெறும் ஒருங்கிணைந்த இஃப்தார் நிகழ்ச்சி இது என்று குறிப்பிட்டார்.

இறுதியாக தேநீர் மற்றும் இரவு உணவு பரிமாறப்பட்டது. மக்கள் பிரார்த்தனை மற்றும் இரவு வணக்கங்களில் ஈடுபட்டு விட்டு; கலைந்து சென்றனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...