மனைவியை வேவு பார்க்க புர்க்கா அணிந்த கணவர்!

ஜூலை 19, 2018 790

துபாய் (19 ஜூலை 2018): மனைவியை கள்ளக் காதலுடன் கையும் களவுமாக பிடிக்க புர்க்கா அணிந்து கணவர் வேவு பார்த்தபோது கைது செய்யப் பட்டுள்ளார்.

துபாய் மெட்ரோ ஸ்டேஷனில் இந்த சம்பவம் நட்ந்துள்ளது. ஒரு ஆண், பெண் உடைக்கு மாறியதையும் அவர் புர்க்கா அணிந்து செல்வதையும் பார்த்த ரெயில்வே போலீசார் துபை அல் ஃபஹிதி மெட்ரோ ரெயில் நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

விசாரணையில் மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக அறிந்த அவர் மனைவியை வேவு பார்க்க காலையிலிருந்தே மனைவியை பின் தொடர்ந்ததாகவும் தெரிய வந்தது. இதனை அடுத்து அவருக்கு 2000 யூ.ஏ.இ திர்ஹம் அபராதம் விதித்தனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...