ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை வழங்கப் பட்ட இந்தியர் விடுதலை!

ஜூலை 24, 2018 716

ஷார்ஜா (24 ஜூலை 2018): ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜாவில் மரண தண்டனை வழங்கப் பட்ட இந்தியர் விடுதலை செய்யப் பட்டார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சந்தீப் சிங் என்பவர் ஷார்ஜாவில் இருந்த போது சக நண்பரான மந்தீப் சிங் என்பவரை கொலை செய்த குற்றத்தில் கைது செய்யப் பட்டார்.

சந்தீப் சிங்கிற்கு ஷார்ஜா நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால் சந்தீப் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால் உச்ச நீதிமன்றம் ரத்த தொகை பாதிக்கப் பட்டவர் குடும்பம் தர ஒப்புக் கொண்டால் சந்தீப்பை விடுதலை செய்வதாக கூறியது. ஆனால் அதற்கு மந்தீப் சிங் குடும்பம் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதனை அடுத்து துபையில் இருக்கும் தன்னார்வ அமைப்பு நடத்தி வருபவரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவருமான டாக்டர் எஸ்.பி.சிங் ஒபேரி ரத்த தொகையை தர ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் சந்தீப் சிங் விடுதலை செய்யப் பட்டார்.

சுமார் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த சந்தீப் சிங் மரண தண்டனையிலிருந்து விடுதலையாகி இந்தியாவுக்கு திரும்பவுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...