திசை மாறி சென்று ஜித்தாவிற்கு திரும்பி வந்த ஏர் இந்தியா விமானம்!

ஆகஸ்ட் 19, 2018 758

ஜித்தா (19 ஆக 2018): ஜித்தாவிலிருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானம் திசை மாறி சென்று மீண்டும் ஜித்தாவிற்கே திரும்பி வந்தது.

ஜித்தாவிலிருந்து ஏர் இந்தியா AI-966 விமானம் சனிக்கிழமை இரவு மும்பையைநோக்கி புறப்பட்டது. பின்பு விமானம் பறந்து கொண்டிருந்த போது தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஐதராபாத் திசையை நோக்கி விமானம் பறந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானி மீண்டும் ஜித்தா விமான நிலையத்தை தொடர்பு கொண்டு அவசரமாக தரையிறக்க வேண்டி கோரிக்கை விடுத்தார்.

இதனை அடுத்து விமானம் ஞாயிற்றுக் கிழமை காலை ஜித்தாவில் தரையிறங்கியது. இதனால் பயணிகள் குழப்பமும் பதற்றமும் அடைந்தனர். தற்போது பயணிகள் அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...