எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த 100 பேருக்கு மர்ம காய்ச்சல்!

செப்டம்பர் 06, 2018 625

துபாய் (06 செப் 2018): ஐக்கிய அரபு அமீரகம் துபாயிலிருந்து நியூயார்க் நகரத்துக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்ற பயணிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைனர் விமானம் 521 பயணிகளை ஏற்றிக் கொண்டு, நியூயார்க் புறப்பட்டது. விமான பயணம் ஆரம்பித்த போது ஒரு சிலருக்கு மட்டும் காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், விமானம் அமெரிக்காவை வந்தடைவதற்குள் பல பயணிகளும் இதே போல காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை கண்டு விமான ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து விமான ஊழியர்கள், நியூயார்க் விமான நிலையத்துக்கு இது குறித்து தெரியபடுத்தினர்.

விமானம் தரையிறங்கிய உடன், தயாராக இருந்த மருத்துவக் குழு உடனடியாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பயணிகளை சோதனை செய்தனர். அதில், 19 பேருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. அதில் 11 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்த தகவலை மறுத்துள்ள நியூயார்க் நகரின் சுகாதார கமிஷனர் ஆக்சிரிஸ் பார்பட் "மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதற்கான சோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்னும் அதற்கான முடிவுகள் வரவில்லை. சிகிச்சைப் பெற்று வரும் அனைவரும் நலமாகவே உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...