மீண்டும் ரசாயன தாக்குதல் நடத்த சிரியா தயாராவதாக குற்றச்சாட்டு!

செப்டம்பர் 07, 2018 449

டமாஸ்கஸ் (07 செப் 2018): சிரியாவில் மீண்டும் ஒரு ரசாயன தாக்குதல் நடத்த சிரியா அரசு தயாராகி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இட்லிப் மாகாணத்தின் மீது ரசாயன தாக்குதல்கள் நடத்த சிரியா அரசு படைகள் தயாராகிக் கொண்டிருப்பதற்கான "நிறைய ஆதாரங்கள்" இருப்பதாக அந்நாட்டிற்கான புதிய அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி பெரிய நகரமான இட்லிப் மீது நடக்கக்கூடிய தாக்குதல் கொடுமையானதாக இருக்கும் என்று ஜிம் ஜெஃபரி கூறியதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என சிரிய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று ரஷ்யா மற்றும் இரான் நாட்டு தலைவர்கள் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...