வெள்ளத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்து - மாணவர்கள் உட்பட 18 பேர் பலி!

அக்டோபர் 26, 2018 617

அம்மான் (26 அக் 2018): ஜோர்டான் மழை வெள்ளத்தில் பள்ளிப் பேருந்து ஒன்றி அடித்துச் செல்லப் பட்டதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வளைகுடா நாடுகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் ஜோர்டான் நாட்டில், பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேருந்து ஒன்றில் சுற்றுலா சென்றுள்ளனர். சாக்கடல் என்னும் பகுதியில் அவர்களின் பேருந்து மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப் பட்டது. இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 11 பேர் படு காயங்களுடன் மீட்கப் பட்டுள்ளனர். மீட்புப் பணிக்காக ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பப் பட்டுள்ளன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...