குவைத் விமான நிலையம் மூடல்!

நவம்பர் 15, 2018 666

குவைத் (15 நவ 2018): கனமழை காரணமாக குவைத் விமான நிலையம் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப் பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கத்தார், சவூதி, குவைத் உள்ளிட்ட நாடுகளில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இந்நிலையில் குவைத்தில் மழை காரணமாக சாலைகள் தண்ணீரால் மூடப் பட்டுள்ளதால் குவைத் விமான நிலையம் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடப் பட்டுள்ளது.

புதன் இரவு குவைத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் தம்மாம், ரியாத், பஹ்ரைன் உள்ளிட்ட நகரங்களுக்கு திருப்பி விடப் பட்டன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...