ஜித்தாவில் தமுமுக சார்பில் நடைபெற்ற மனித நேய சமூக கருத்தரங்கம் (புகைப்படங்கள்)

டிசம்பர் 30, 2018 589

ஜித்தா (30 டிச 2018): ஜித்தாவில் தமுமுக சார்பில் மனித நேய சமூக கருத்தரங்கம் கடந்த டிசம்பர் 28 (2018) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாலை 5 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி மனிதநேய கருத்தரங்கம் ஜித்தா துணைச் செயலாளர் இலியாஸ் தலைமை வகிக்க, பொறியாளர் அப்துல் ஹலீம் வரவேற்புரையுடன்,
ஜித்தா மேற்கு மண்டல தலைவர் அப்துல் மஜீத் , மாநகர செயலாளர் ராஜாமுஹம்மது , ஜித்தா மாநகர பொறுப்பாளர், ஜலால், ரிள்வான், முஸ்தாக், சமீர் மற்றும் சிராஜ் மரிக்கா மதினா தமுமுக முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சகோதரர் ஷெரீப் (செந்தமிழ் நல மன்றம்), சகோதரர் ஜாகிர் ஹுசைன் (திராவிட முன்னேற்ற கழகம்), சகோதரர் நூருல் அமீன் (ஜித்தா தமிழ் சங்கம் & Mepco), சகோதரர் குரு (ஜித்தா தமிழ் தண்டர்ஸ்), சகோதரர் முஹம்மத் பயாஸ், (இந்தியன் ஃபெடரினிடி போரம்), சகோதரர் பாண்டியன் (செந்தமிழ் நல மன்றம்), சகோதரர் பாஷா (நாம் தமிழர் கட்சி) ஆகியோர், வாழ்த்துரை வழங்கினார்கள்.

 

நிகழ்ச்சியின் முத்தாய்பாக ஜித்தா தாவா சென்டர் நிறுவனர் *ஷேக் ஹமூத் அஷ்ஷமீம்ரி* உரை நிகழ்த்தியும் இந்த வருடம் தமுமுக சார்பாக ஹாஜிகளுக்கு சிறப்பான சேவை செய்தவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியும் சிறப்பித்தார். குறிப்பாக ஜித்தா ஹஜ் தன்னார்வ பொறுப்பாளர் அஜ்வா நெய்னா வேறு நாடு சென்றுள்ளதால் அவர் பெயரில் அதிரை ஜஃபருல்லாஹ் சான்றிதழ் பெற்றுக் கொண்டார். தொடர்ச்சி யாக, மேற்கு மண்டல பொருளாளர் தூத்துக்குடி சம்சுதீன் சிற்றுரை, அதிரை ஜப்ருல்லாஹ் பாடிய ஆரூர் புதியவனின் கவிதை , தமுமுக சவூதி, பஹ்ரைன் மண்டல 2019 காலன்டர் வெளியீடு, ஆரூர் புதியவன் எழுதிய புத்தகம் வெளியீடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் ஹஜ் தன்னார்வலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. 

இந்நிகழ்ச்சிகளை மேற்கு மண்டல துணை செயலாளர் பொறியாளர் கீழை. இர்பான் தொகுத்து வழங்கினார். இறுதி சிறப்புரையாக ரியாத் மண்டல தலைவர், நூர் முஹம்மத்* அவர்கள் மாற்றத்தை நோக்கி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். இந்த கருத்தரங்கில் பெண்கள் உள்பட நூற்றுக்கு மேலானோர் கலந்து கொண்டார்கள்.

இறுதியாக யான்பு நகர தலைவர் அணீஸ் நன்றியுரையுடன் கருத்தரங்கம் நிறைவுபெற்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...