குவைத் இந்திய தொழிலாளர்களின் குறைந்த பட்ச ஊதியம் உயர்வு!

ஜனவரி 04, 2019 452

குவைத் (04 ஜன 2019): குவைத் இந்தியர்களின் குறைந்த பட்ச ஊதியம் உயர்த்தப் பட்டுள்ளது.

குவைத் இந்திய தூதரக இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ள தகவலின்படி, லேபர், டிரைவர், வீட்டு பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் ஊதியம் 70 தினாரிலிருந்து 100 தினாராக உயர்த்தப் பட்டுள்ளது.

அதேபோல டிப்ளமோ செவிலியரின் ஊதியம் 275 தினாராகவும், பி எஸ்ஸி பட்டப் படிப்பு பயின்ற செவிலியர்களின் ஊதியம் 350 தினாராகவும் உயர்த்தப் பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களிடையேயான தொழிலாளர் ஒப்பந்தங்களில் மாற்றம் இல்லை.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...