அபுதாபியில் உணவு நிறுவனத்தில் உணவின்றி தவிக்கும் இந்தியர்கள்!

ஜனவரி 07, 2019 232

அபுதாபி (07 ஜன 2019): அபுதாபி கேட்டரிங் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நூற்றுக்கும் அதிகமான இந்தியர்கள் ஊதியம் மற்றும் உணவு இன்றி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அபுதாபி முஸ்ஃபா என்ற கேட்டரிங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஐந்து மாதங்களாக ஊதியம் வழங்கப் படவில்லை. மேலும் உணவு இல்லாமலும் அவர்கள் அவதியுறுகின்றனர்.

இது குறித்து இந்திய தூதரகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என தெரிகிறது. மேலும் இன்சூரன்ஸ் அட்டை புதுப்பிக்காததால் நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது தங்குமிடத்திலிருந்தும் அவர்கள் வெளியேற்றப் படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...