இந்தியாவை காப்பாற்ற ஒவ்வொரு வெளிநாடு வாழ் இந்தியரும் உதவ வேண்டும் - துபாயில் ராகுல் காந்தி உரை!

ஜனவரி 12, 2019 792

துபாய் (12 ஜன 2019): இந்தியாவை பிரிவினைவாதிகள் இடமிருந்து காப்பாற்ற ஒவ்வொரு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பொறுப்புண்டு என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபாயில் பேசினார்.

இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நேற்று மாலை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உரையாற்றினார். பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்ற இந்த நிகழ்வில் ராகுல் காந்தி உரையாற்றியபோது,

“கடந்த நான்கரை ஆண்டுகளாக என் நாட்டில் சகிப்புத் தன்மையில்லாததை கூறுவதில் வருத்தமடைகிறேன். அரசியல் ஆதாயங்களுக்காக எனது அன்பான நாடு இந்தியா தற்போது பிரிக்கப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும். மீண்டும் ஒன்றுபட வேண்டும் அது உங்களால்தான் முடியும். அதற்கு உலகில் உள்ள ஒவ்வொரு இந்தியர்களும் கைகொடுக்க வேண்டும்.

மகாத்மா காந்தி வன்முறையை விரும்பவில்லை ஒவ்வொரு மதங்களிலிருந்தும் அன்பை கற்றுக் கொண்டார். அந்த இந்தியாவைதான் அவர் விரும்பினார். பல மதங்கள், பல கலாச்சாரங்கள் உள்ளடக்கிய நாடு. அதுதான் இந்தியா. ஒவ்வொருன் இந்தியர்களின் டி.என்.ஏவிலும் அஹிம்சை உள்ளது. அதைத்தான் ஒவ்வொருவரும் விரும்புகிறோம். அதற்கு ஒவ்வொரு இந்தியர்களின் உதவியும் அவசியமாகிறது." என்றார்.

மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திராவிற்கு தனி அந்தஸ்து வழங்கப்படும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

முன்னதாக உரையை தொடங்கும்போது, துபாயின் அனைத்து தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார் குறிப்பாக சேக் கலீஃபா பின் ஜியாத் அல் நஹ்யான் உள்ளிட்ட தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...