துபாயில் ராகுல் காந்தியுடன் செல்ஃபி எடுத்து வைரலான பெண் குறித்த சுவாரஸ்ய தகவல்!

ஜனவரி 14, 2019 875

துபாய் (14 ஜன 2019): துபாயில் ராகுல் காநதியுடன் செல்ஃபி எடுத்து வைரலான பெண் யார் என்பது குறித்து பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவுகின்ற போதிலும் அவர் யார் என்பது குறித்த உண்மையான தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தியின் துபாய் பயணத்தின் போது விமான நிலையத்தில் காத்திருந்த ஒரு பெண் ராகுலக் கண்டதும் செல்ஃபி எடுக்க அனுமதி கேட்டுள்ளார். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஆனால் ராகுல் காந்தி பரவாயில்லை எடுக்கட்டும் என்று அனுமதித்துள்ளார்.

அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் அவர் துபாய் நாட்டை சேர்ந்தவர் என்ற செய்தியும் கூடவே பரவியது. ஆனால் அவர் கேரள மாநிலம் காசர் கோட்டை சேர்ந்த ஹசீன் அப்துல்லா என்பதாகும்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் செல்ஃபி எடுக்கும் நோக்கத்தில் இல்லை. ராகுலை வரவேற்கும் பலருடன் நானும் நின்றிருந்தேன். அப்போது திடீரென ராகுல் காந்தி நடந்து வந்ததைக் கண்டு சட்டென்று யோசனை வந்தது. அப்போது அவரிடம் அனுமதி கேட்டேன் உடனே ஒப்புக் கொண்டார்." என்று ஹசின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...