தங்கையின் போட்டோவை ஃபேஸ்புக்கில் பதிந்ததால் நண்பன் படுகொலை!

ஜனவரி 20, 2019 554

ஷார்ஜா (20 ஜன 2019): ஷார்ஜாவில் தங்கையின் போட்டோவை ஃபேஸ்புக்கில்பதிந்த நண்பனை கத்தியால் குத்தி படுகொலை செய்ததாக குற்றவாளி நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஷார்ஜாவில் பணிபுரியும் இரு வெளிநாட்டினர் ஒரே தங்குமிடத்தில் தங்கியிருந்தனர். அப்போது தனது தங்கையின் போட்டோவை சக நண்பன் ஃபேஸ்புக்கில் பதிந்ததை கண்டு ஆத்திரமுற்ற மற்றொருவர் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து நண்பனை குத்தியுள்ளார். குற்றவாளி கொலை செய்யும் போது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த சக நண்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸ் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது. குற்றவாளி குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில் வழக்கை வரும் பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...