ஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர் திருநாள் கொண்டாட்டம்!

ஜனவரி 21, 2019 522

சவூதி (21 ஜன 2019): ஜித்தாவில் வரும் 24 ஆம் தேதி ஜித்தா தமிழ் மன்றம் சார்பில் தமிழர் திருநாள் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஜித்தா தமிழ் மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜித்தா, சவூதி அரேபியா. 'ஜித்தா தமிழ் மன்றம்' சார்பில் நடத்தும் "தமிழர் திருநாள் கொண்டாட்டம் 2019' வருகிற ஜனவரி 24-ஆம் தேதி வியாழக்கிழமை மாலை எட்டு மணிக்கு ஜித்தா மன்னர் அப்துல்லாஹ் சாலையில் (காரா பில்டடிங்) உள்ள 'பாம்பே டிலைட்ஸ்' உணவகத்தில் மாபெரும் தமிழ் கலை விழா நிகழ்ச்சி ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்த நிகழ்ச்சி யூனிவெர்சல் இன்ஸ்பெக்ஷன் கம்பெனி லிமிடெட்; ஆர்யாஸ் உணவகம் மற்றும் தாதாபாய் டிராவல் ஏஜென்சி ஆகியோர்களின் அனுசரணையுடன் நடக்க இருக்கிறது.

இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் கலைநிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான மாறுவேடப்போட்டி நடக்க இருக்கின்றன. இந்த மாபெரும் கலை நிகழ்ச்சிக்கு ஏராளமான பிரமுகர்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிப் பற்றி மேலும் விபரம் தெரிந்துக்கொள்வதர்க்கும், முன்பதிவு செய்வதற்கும் கீழ்கண்ட ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணை தொடர்புக்கொள்ளலாம்.

0548599010 அல்லது 0593308276 அல்லது 0542210869

இந்த நிகழ்ச்சிக்கு வரும் தமிழ் சான்றோர்களை "ஜித்தா தமிழ் மன்றம்" சார்பில் வரவேற்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...