சவூதியில் மாற்றி அமைக்கப்பட்ட ஹுரூபு விதிமுறைகள்!

பிப்ரவரி 04, 2019 691

ரியாத் (04 பிப் 2019): சவூதியில் ஹுரூப் முறையில் ஸ்பான்சர் மாற்றம் செய்வதில் விதிமுறைகள் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.

சவூதியில் ஒரு ஸ்பான்சரிடம் பணிபுரிபவர் வேலைக்கு அனுமதியின்றி வராமலோ அல்லது ஸ்பான்சரின் அனுமதி இல்லாமலோ வேறொரு ஸ்பான்சரிடம் வேலைக்கு சேரும் வழிமுறை கடந்த சிலவருடங்களாக இருந்து வந்தது.

இந்நிலையில் இனி அந்த வழிமுறையில் வேறொரு ஸ்பான்சரிடம் வேலைக்கு சேர முடியாது. அதாவது தங்கள் பணிபுரியும் நிறுவனமோ அல்லது ஸ்பான்சரோ ஆன்லைன் மூலம் அனுமதி அளிக்க வேண்டும். மேலும் இக்காமா தேதி அல்லது காலம் காலாவதி ஆகாமல் இருக்க வேண்டும். மேலும் தற்போது பணிபுரியும் நிறுவனத்தில் குற்ற காரியங்களில் அல்லது நிறுவனத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபடாமல் இருந்திருக்க வேண்டும். இவ்வாறு உள்ளவர்கள் மட்டுமே வேறொரு நிறுவனத்திற்கு ஸ்பான்சர்ஷிப் மாற்றிக் கொள்ளலாம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...