மீண்டும் மெர்ஸ் வைரஸ் - ஓமனில் இருவர் மரணம்!

பிப்ரவரி 05, 2019 453

ஓமன் (05 பிப் 2019): ஓமனில் மெர்ஸ் பாதிக்கப் பட்ட இருவர் மரணம் அடைந்துள்ளதாக ஓமன் ஆரோக்கிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளை மிரட்டிய மெர்ஸ் வைரஸ் பாதிப்பு மீண்டும் தற்போது ஓமனில் இருவரை பலி கொண்டுள்ளது. இதுவரை ஓமனில் மெர்ஸ் பாதிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை ஐந்து ஆகும்.

கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு மெர்ஸ் பாதிப்பில் மரணம் நிகழ்ந்துள்ளது. மேலும் மெர்ஸ் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாக ஓமன் ஆரோக்கிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மெர்ஸ் வராமல் தடுக்க இருமல், தும்மல் ஏதும் ஏற்பட்டால் துணியாலோ, டிஸ்ஸு தாள் கொண்டோ மூடிக் கொள்ள வேண்டும், உணவில் கவனம் செலுத்த வேண்டும், மேலும் கைகளையும் உடல்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று ஓமன் ஆரோக்கிய அமைச்சகம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...