குவைத்தில் குழந்தைகளுக்காக சிறப்பு மருத்துவமனை!

பிப்ரவரி 05, 2019 341

குவைத் (05 பிப் 2019): குவைத்தில் குழந்தைகளுக்காக சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என்று குவைத் ஆரோக்கிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குவைத்தில் குழைந்தளுக்கென அனைத்து வசதிகளும் கொண்ட மருத்துவமனை உறுவாக்கப் படவுள்ளதாகவும், 792 குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்கும் அளவில் அந்த மருத்துவமனை இருக்கும் என்றும் 4 வருடங்களுக்குள் அது கட்டி முடிக்கப்படும் என்றும் ஆரோக்கிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குவைத்தில் பல மருத்துவமனைகள் உள்ளபோதிலும், குழந்தைகளுக்காக சிறப்பு மருத்துவமனை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...